Propellerads
Navigation

மாதவன் - விஜய்சேதுபதி படத்தில் பாலா நாயகி

மாதவன், விஜய்சேதுபதி முதன்முதலாக இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர் என்பதும் இந்த படத்தை புஷ்கர்-காயத்ரி இயக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 'விக்ரம் வேதா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகிகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தில் மிக அபாரமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய வரலட்சுமி சரத்குமார் இந்த படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆகிய 'யூ டர்ன்' நாயகி ஷாரதா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். அதுமட்டுமின்றி 'கிருமி' நாயகன் கதிர் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவல்களை தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பு உறுதி செய்துள்ளது.

ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு சி.எஸ். சாம் இசையும், பி.எஸ்.விநோத் ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பும் செய்யவுள்ளனர்.
Share
Banner

Post A Comment: