செக்ஸ் படங்களில் நடிக்கமாட்டேன் - டாப்சி
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக திகழ்ந்த ‛வெள்ளாவி பொண்ணு' டாப்சி, இப்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். கைவசம் நிறைய படங்கள் வைத்திருப்பவர் இப்போது ‛நாம் சபானா' என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இதில் அவருடன் மனோஜ் பாஜ்பாயும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, காமெடி படமாக உருவாகி வரும் ‛ஜூட்வா-2' படத்தில் வருண் தவானுடன் நடிக்கிறார். சமீபத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்த டாப்சி, தனக்கு செக்ஸ் காமெடியில் நடிக்க ஆர்வமில்லை என்று கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது... ‛‛உடல் அசைவுகளால் மற்றவர்களை சிரிக்க வைக்கும் படங்களில் தான் நடிக்க ஆசை, இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த செக்ஸ் காமெடி படங்களில் நடிக்க விருப்பம் கிடையாது.
பாலிவுட், ஹாலிவுட்டில் கூட வெளியான அதுபோன்ற செக்ஸ் காமெடி படங்களை நான் பார்ப்பது கிடையாது. ஒருபோதும் அப்படிப்பட்ட படங்களில் நடிக்க மாட்டேன். ஸ்லாப்ஸ்டிக் காமெடி படங்களில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை'' என்று கூறியுள்ளார்.
Post A Comment: