உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான் இயக்குநரும், இந்தியாவில் அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையையும் பெற்றவருமான தாசரி நாராயண ராவ் காலமானார்.
அவரது மறைவு தெலுங்கு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாசரி மறைவுக்கு கமல் மற்றும் ரஜினி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரஜினி தன் டுவிட்டரில், இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர், நடிகர்களில் ஒருவர் தாசரி நாரயண ராவ். அவரது மறைவு இந்திய சினிமாவிற்கு ஈடு இணை செய்ய முடியாத இழப்பு. தாசரி நாரயண ராவ் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
கமல் தன் டுவிட்டரில், தாசரி நாராயண ராவ் மறைவு தெலுங்கு சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Post A Comment: