'பிரேமம்' சாய் பல்லவி இப்போது தெலுங்கு தேசத்தில் 'ஃபிடா' சாய் பல்லவி என புகழ் பெற்று விட்டார்.
மலையாளத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே மலர் டீச்சர் என அவருடைய கதாபாத்திரப் பெயராலேயே நேசிக்கப்பட்டார்.
அதே போல தெலுங்கிலும் அறிமுகமான முதல் படத்திலேயே பானுமதி என்ற அவருடைய கதாபாத்திரப் பெயரால் அதிகம் நேசிக்கப்படும் நடிகையாக மாறிவிட்டார்.
படத்தில் அவருடைய தெலுங்கானா தெலுங்குக்கும், நடனத்திற்கும் தெலுங்கு ரசிகர்கள் மயங்கிவிட்டார்களாம். சாவித்ரி, சௌந்தர்யா வரிசையில் சாய் பல்லவியும் இடம் பெறுவார் என விமர்சகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
மலையாளத்திலும், தெலுங்கிலும் அறிமுகமாகிவிட்ட சாய் பல்லவி இப்போதுதான் தமிழில் 'கரு' படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில்அளித்த பேட்டி ஒன்றில், 'கல்லூரி நாட்களில் இருந்தே சூர்யாவுடைய மிகப் பெரிய ரசிகை நான். அவருடைய படங்களைத் தவறாமல் பார்ப்பேன். எந்த சமயத்திலும் அவருடன் நடிக்கத் தயாராக இருக்கிறேன்,' எனக் கூறியுள்ளார்.
சாய் பல்லவியின் ஆசையை நிறைவேற்றுவாரா சூர்யா?
Post A Comment: