Propellerads
Navigation

5 வருட காதலை முறித்துகொண்ட ரன்வீர் - தீபிகா ஜோடி

ஹிந்தி நடிகை தீபிகா படுகோனேவும் ஹிந்தி  நடிகர் ரன்வீர் சிங்கும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர்.

தீபிகாவை மணக்க வேண்டும் என்று ரன்வீர் விரும்பினார். ஆனால் தீபிகா இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. 'இப்போது திரை உலக வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது பிறகு பார்க்கலாம்' என்று தவிர்த்துவிட்டார்.

தீபிகா ஹொலிவுட் படப்பிடிப்புக்கு சென்ற போது ரன்வீரும் வெளிநாட்டுக்கு சென்று அவருடன் நேரத்தை செலவிட்டார்.
பின்னர் ஹொலிவுட் நடிகர் வின்டீசலுடன் தீபிகா நெருக்கமாகி விட்டதாக பேச்சு எழுந்தது.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தீபிகா, 'ஆங்கில நடிகர் வின்டீசலுடன் கனவில் குடும்பம் நடத்தி குழந்தை பெற்று விட்டேன்' என்று கூறினார்.

என்றாலும், ரன்வீர் சிங் பொறுமையாக இருந்தார். ஆனால், அண்மை காலமாக தீபிகா அவருடைய இஷ்டம் போல் நடந்து கொண்டார். ரன்வீரை கண்டு கொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே லேசாக ஏற்பட்ட சிறிய இடைவெளி இப்போது விரிசலடைந்து பெரிதாகிவிட்டது.
தற்போது ரன்வீர் தனது காதலி தீபிகாவை பிரிந்து சென்று விட்டார். பழைய காதலியை பிரிந்த சோகத்தை மறக்க வேறு ஒரு பெண்ணை காதலிக்க தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Share
Banner

Post A Comment: