மும்பையிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு 167 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸின் போயிங் (737 - 800) ரக விமானம் நேற்று பிற்பகலில் புறப்பட்டுச் சென்றது.
அப்போது, ஜோத்பூரில் தரை இறங்குவதற்கு முன்பாக, விமானத்தில் இடது புறத்தில் உள்ள என்ஜினில் பறவை மோதியதால், அதில் தீ பிடித்ததாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரி கூறியுள்ளார்.
அதன் பின்னர், இது தொடர்பாக விமான ஓட்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விமானம் தரையிறக்கப்படாமல் வானத்திலேயே வட்ட மடிக்கச் செய்துள்ளார் விமானி. அதன் பின்னர், என்ஜினில் தீப்பிடிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார்.
இதனால், விமானத்தில் பயணம் செய்த 167 பயணிகளுக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தரையிறக்கப்பட்ட விமானத்தின் இடதுபுற என்ஜினில் பறவை மோதியதற்கான தடயங்கள் இருந்ததை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, என்ஜினிக்கு ஏதேனும், சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள தொடங்கினர்.
Post A Comment: