Propellerads
Navigation

ஓவியாவை கேவலப்படுத்துகிறதா பிக்பாஸ் குழு?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனை விட, அந்த தொலைக்காட்சியை விட அதிகமாக பேசப்படுவது ஓவியாதான்.

ஓவியாவுக்கு கிடைத்துள்ள இந்த எதிர்பாராத புகழ் பிக்பாஸ் குழுவினர்களே எதிர்பாராத ஒன்று.

இந்த புகழ் நாள் ஆக ஆக அதிகமாகி கொண்டே வருவதால் பிக்பாஸ் டீமுக்கே பொறமை ஏற்பட்டுள்ளதோ என்று சந்தேகிக்கும் வகையில் நிகழ்ச்சி சென்று கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஒரு சுயமரியாத உள்ள மனிதர் எத்தனை கோடி கொடுத்தாலும் தனக்கு துரோகம் செய்த ஒருவருக்கு ரெட் கார்ப்பேட் விரிக்க மாட்டார்.

அவ்வாறு இருக்கும்போது ஓவியாவுக்கு மட்டுமின்றி இந்த நிகழ்ச்சிக்கே வில்லியாக இருக்கும் ஜூலிக்கு ரெட் கார்ப்பெட் என்பதெல்லாம் ஓவராக தெரிவதாகவும், அதுவும் ஓவியா அவருக்கு ரெட் கார்ப்பெட் விரிக்க வேண்டும் என்ற டாஸ்க்கை ஏற்று கொள்ளவே முடியாது என்றும் நெட்டிசன்கள் டுவீட் செய்து வருகின்றனர்.

ரெட் கார்ப்பெட் விரித்த ஓவியா, ஜூலியை கீழே விழும்படி செய்தபோது நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த நேயர்கள் கைதட்டி ரசித்தனர்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் பதறி ஓவியாவுக்கு அறிவுரை சொல்வதை பார்த்தால் ஓவியாவை வேண்டும் என்றே கார்னர் செய்வது அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் இல்லை என்றும், இந்த நிகழ்ச்சிக்கு திரைக்கதை எழுதுபவர்களே காரணம் என்று எண்ண தோன்றுவதாக கூறப்படுகிறது.

சங்கு சுட்டாலும் வெண்மை தரும், சுடச்சுட சுடரும் பொன் போல் என்னதான் ஓவியாவை அந்த டிவியும் சேர்ந்து அவமதித்தாலும் ஓவியாவுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம் என்று ஓவியா ஆர்மியினர் கூறி வருகின்றனர்.
Share
Banner

Post A Comment: