அனுஷ்கா உடல் எடையை குறைத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா. தல, தளபதியுடன் இணைந்து நடித்தவர்கள் பட்டியலில் நயன்தாராவுக்கு அடுத்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், ஆர்யா நடித்த இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகப்படுத்தியிருந்தார்.
இது அவருக்கு சினிமா வாய்ப்பில் பிரச்சினையாக அமைந்து விட்டது. அதிக உடல் எடையால் பல படங்களில் நடிக்க முடியாமல் போனது.
ராஜமௌலியின் பிரமாண்ட படைப்பான பாகுபலி படத்தில் கூட உடல் எடையை குறைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்த இவருக்கு கிராபிக்ஸ் தான் உதவி செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், விடாமுயற்சி, கடின உடற்பயிற்சி, யோகா போன்றவற்றிற்கு கிடைத்த பரிசு அனுஷ்கா உடல் எடை குறைய காரணமாக அமைந்துவிட்டது.
அண்மையில், ஒரு நிகழ்ச்சிக்கு வந்த இவரைப்பார்த்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அதோடு, எப்படியிருந்த அனுஷ்கா இப்படி ஆகிவிட்டார் என்று பலரும் பேசத்தொடங்கிவிட்டனராம்.
Post A Comment: