கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும்பாலும் சுவாரஸ்யமாகவும், சில சமயம் சொதப்பலாகவும் போய்க்கொண்டிருக்கின்றது.
ஓவியாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அனைவரும் கார்னர் செய்த நிலையில் தற்போது ஓவியாவின் பக்கம் ஒவ்வொருவராக சாய ஆரம்பித்துவிட்டனர்.
காயத்ரி உள்பட ஜூலியை அனைவருமே விமர்சித்து அவரை தனிமைப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சமையல் போட்டி டாஸ்க் வழங்கப்படுகிறது. இரண்டு பிரிவினர் தனித்தனியாக சமையல் செய்ய, போட்டியின் நடுவராக ஜூலி நியமிக்கப்படுகிறார்.
நடுவரான ஜூலி சக்தி டீமை வெற்றியாளராக அறிவித்தது மட்டுமின்றி ஆரவ்வை அவமதிக்கும் வகையில் பேசுகிறார்.
சின்ன பிக்பாஸ்களில் ஒருவரான ஆரவ்வை அவமதித்ததால், கடுப்பான இன்னொரு சின்னபிக்பாஸ் காயத்ரி ஜூலியிடம், உன்னை நடுவராக நியமித்ததால் உனக்கென்ன கொம்பு முளைச்சிடுச்சுன்னு நினைப்பா? என்று கடிந்து கொள்கிறார்.
தனக்கு இருந்த ஒரே ஆதரவாளரான காயத்ரியும் தனக்கு எதிராக திரும்பிவிட்ட அதிர்ச்சியில் உள்ளார் ஜூலி. ஓவியா ஒருமுறை கூறியவாறு 'எப்பவுமே பொடிகார்டு இருப்பாங்கன்னு நினைக்காதே' என்பது இப்போது உண்மையாகிவிட்டது.
Post A Comment: