'பிக் பாஸ்' வீட்டுக்குள் முதன் முதலாக நுழையும் போது 15 போட்டியாளர்களுமே மிகவும் மகிழ்ச்சியுடன்தான் நுழைந்தார்கள்.
ஆனால், முதல் நாளிலிருந்தே நடிகர் ஸ்ரீ மட்டும் எதையோ பறி கொடுத்தவர் போல விருப்பம் இல்லாமல் இருந்தார்.
அடுத்த சில நாட்களில் அவராகவே வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்து அதிகாரப்பூர்வமாக நடிகை அனுயா வெளியேற்றப்பட்டார்.
நடிகர் பரணிக்கும் மற்றவர்களுக்கும் இடையே சரியான புரிதல் இல்லாததால், தன் மீது வீண் பழி சுமத்தியதைத் தொடர்ந்து பரணி கோபப்பட்டு அவராக வெளியேறினார். அடுத்து கஞ்சா கருப்பு, ஆர்த்தி, நமீதா நேயர்களால் வாக்களிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
தற்போது ஓவியா, காயத்ரி, ரைசா, ஜுலி, சக்தி, சினேகன், கணேஷ் வெங்கட்ராமன், வையாபுரி, ஆரவ் ஆகியோர் 'பிக் பாஸ்' வீட்டில் போட்டியாளர்களாக உள்ளனர்.
இவர்களில் வையாபுரி, ரைசா ஆகிய இருவர் மட்டும் வேண்டா, வெறுப்பாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள்.
வையாபுரி இரண்டாவது வாரத்திலிருந்தே வெளியேற வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இந்த வாரத்தில் ரைசாவும் சீக்கிரமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
நேற்றைய நிகழ்ச்சியில் கூட 'பிக் பாஸ்'ஐ திட்டி ஒரு கெட்ட வார்த்தையும் பேசினார். நல்ல வேளை, அதை ஒலி இல்லாமல் 'மியூட்' செய்துவிட்டார்கள்.
ரைசா அவர் உண்டு, அவர் மேக்கப் உண்டு, 'யெஸ், யெஸ், ரைட்' என்ற வார்த்தைகள் உண்டு என தனியாகவே இருக்கிறார்.
தூங்குவதற்கு முன்பு கூட தன்னுடைய மேக்கப் கலைந்துவிட்டதா என கண்ணாடியைப் பார்த்துவிட்டுதான் தூங்குகிறார்.
யாருடனும் அதிகமாகப் பழகுவதில்லை, ஜுலியுடன் மட்டுமே பேசுகிறார். வையாபுரியும், ரைசாவும் நிகழ்ச்சியில் இருப்பதையே பிடிக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த இரண்டு நாட்களாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் சுவாரசியமே இல்லை என ரசிகர்கள் கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இயல்பாக போய்க் கொண்டிருந்த நிகழ்ச்சியில் தற்போது காயத்ரிக்கு திடீரென அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.
ஜாலியான பெண்ணாக காட்டப்பட்ட ஓவியாவை கடந்த சில நாட்களாக அடிக்கடி வேண்டுமென்றே அழ வைத்து வெறுப்பேற்றுகிறார்கள் என ஓவியா ரசிகர்கள் கோபப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.
நேற்று நடந்த 'சின்ன பிக் பாஸ்' நாடகம் இன்றும் தொடரும் என்றே தெரிகிறது.
Post A Comment: