கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவராகிய காயத்ரி மீது கடந்த சில நாட்களாகவே பார்வையாளர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.
அவருடைய பேச்சு, நடவடிக்கை, குறிப்பாக அவர் ஓவியாவுக்கு கொடுக்கும் டார்ச்சர் ஆகியவற்றால் நேயர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களில் ஒருசிலரும் காயத்ரியை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே காயத்ரியை நல்லவராக காட்ட பிக்பாஸ் குழுவினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பின்னணியில் என்ன அழுத்தம் என்று தெரியவில்லை என்றாலும் திடீரென காயத்ரியை பாசிட்டிவ் ஆக ஏற்றுக்கொள்ள பலர் விரும்பவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துக்களில் இருந்து தெரிய வருகிறது.
இந்த நிலையில், நேற்று காயத்ரிக்கு மேலும் ஒரு கௌரவமாக சின்னபிக்பாஸ் என்ற பதவி வழங்கப்பட்டது. இதன்படி அவர் சில முடிவுகளை எடுக்கலாம்.
இதன்படி நேற்று ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் பிக்பாஸ் வீட்டில் யார் இருக்கக்கூடாது என்று முடிவு செய்வதுதான் அந்த டாஸ்க்.
தேர்வு செய்யப்பட்டவர் இரவு வரை பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே இருக்க வேண்டும். அனைவரும் எதிர்பார்த்தபடியே ஜூலியை காயத்ரி தேர்வு செய்தார்.
இதனையடுத்து ஜூலி, இரவு வரை பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே கடுப்புடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment: