ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஜுலை 1ம் தேதி வர உள்ளதால் அடுத்த வாரம் ஜுன் 30ம் தேதி வெளியாக உள்ள படங்களுக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிக்க வாய்ப்பில்லை. அதற்கு மறுநாளே ஜுலை 1ம் தேதி வந்துவிடுவதால் ஜிஎஸ்டி வரி விதிப்பில் அந்தப் படங்கள் வந்துவிடும்.
இந்த சூழ்நிலையில் இன்று வெளியாக உள்ள படங்களில் 'வனமகன்' படம் 'யு' சான்றிதழ் பெற்ற படம் என்பதால் அந்தப் படத்திற்கு தமிழக அரசின் கேளிக்கை வரி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குள் வசூலாகும் தொகை அந்தப் படத்திற்கு உதவியாக இருக்கும்.
'அன்பானவன் அசராதவன் அடங்காவதன்' படம் 'யுஏ' படம் என்பதால் வரி விலக்கு இல்லை. ஆக, 'வனமகன்' படம்தான் தமிழக அரசால் கடைசியாக வரி விலக்கு பெற்ற படம் என்ற பெருமையைத் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: