நடிகர் ஜெயம் ரவி
நடிகை சயேஷா சைகல்
இயக்குனர் ஏ.எல்.விஜய்
இசை ஹாரிஸ் ஜெயராஜ்
ஓளிப்பதிவு திரு எஸ்
சா யிஷா சிறுவயதில் இருக்கும்போது அவளுடைய பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துவிட, அதன்பிறகு சாயிஷாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரகாஷ் ராஜ் வசம் வருகிறது. அதன்பின்னர், பிரகாஷ் ராஜ் சாயிஷாவின் பெயரில் நிறைய தொழில்கள் தொடங்கி சாயிஷாவை பெரிய தொழிலபதிர் ஆக்குகிறார். சாயிஷா பெயரிலேயே எல்லா சொத்துக்களும் இருப்பதால், தன்னுடைய மகனான வருணுக்கு அவளை திருமணம் செய்துவைத்து சொத்துக்களை தன்வசமாக்க நினைக்கிறார் பிரகாஷ் ராஜ்.
இந்நிலையில், அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் போது, காட்டுவாசியான ஜெயம் ரவியின் மீது கார் ஏற்றிவிடுகிறார்கள். அடிபட்டு கிடக்கும் ஜெயம் ரவிக்கும் சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்கிறார்கள். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் இந்தியா கொண்டு வந்துவிடுகிறார்கள். அவருக்கு சிகிச்சை அளித்து நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர் பழைய நினைவுகளை இழந்துவிடுகிறார்.
மேலும், காடுதான் எல்லாமே என்று வாழ்ந்துவந்த ஜெயம் ரவிக்கு நகர வாழ்க்கை புதுமையாக தெரிகிறது. அதேபோல், மற்றவர்கள் பேசும் மொழியும் இவருக்கு வியப்பை கொடுக்கவே, அவர்களிடமிருந்து தனித்தே வாழ்கிறார். இதற்கிடையில், சாயிஷா காட்டுவாசிகளிடம் எப்படி பழகவேண்டும் என்று தெரிந்துகொண்டு ஜெயம் ரவியுடன் நட்பு வளர்க்கிறாள். நாளடைவில் ஜெயம் ரவி சாயிஷாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறார்.
இந்நிலையில், காணாமல்போன ஜெயம் ரவியை தேடி அந்தமான் காட்டு இலாகா அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். ஜெயம் ரவியை பிடித்துக்கொண்டு அந்தமான் செல்கிறார்கள். ஜெயம் ரவியை மீட்பதாக சாயிஷாவும் அந்தமான் போகிறார். போலீஸ் நிலையத்திலிருந்து தப்பிக்கும் ஜெயம் ரவி, சாயிஷாவை கூட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்கிறார்.
அப்போதுதான் ஜெயம்ரவிக்கு அனைத்துமே ஞாபகத்துக்கு வருகிறது. காட்டில் அவர் பிறந்து வளர்ந்தது, அவருக்கென்று ஒரு கூட்டம் இருந்தது, கார்ப்பரேட் கம்பெனிக்காரர்கள் தங்களுடைய இருப்பிடத்தை அழிக்க நினைத்து தன்னுடைய ஆட்களை எல்லாம் காட்டை விட்டே துரத்தியது என அனைத்துமே அவருடைய நினைவில் வருகிறது.
சாயிஷாவை தன்வசம் வைத்துக்கொண்டு தன்னுடைய இனத்தை எப்படி கண்டறிந்தார்? கார்ப்பரேட் கம்பெனிக்காரர்களையும் எப்படி அங்கிருந்து விரட்டி அடித்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஜெயம் ரவி இப்படத்தில் ஒரு இடத்தில்கூட வசனமே பேசவில்லை. படம் முழுக்க தனது முகபாவனையிலேயே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதை மிகவும் நேர்த்தியாகவே செய்திருக்கிறார்கள். இப்படத்தில் இவர் கஷ்டப்பட்டு உழைத்திருப்பது படம் பார்க்கும்போதே தெரிகிறது.
சாயிஷா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். நடனமும் சுழன்று சுழன்று ஆடியிருக்கிறார். எல்லாம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. நடிப்பிலும் சபாஷ் சொல்ல வைக்கிறார். பிரகாஷ் ராஜ் தனது அனுபவ நடிப்பை கொடுத்து படத்திற்கு பலம் சேர்க்க முயற்சித்திருக்கிறார்.
வருணுக்கும் படத்தில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தம்பி ராமையாவின் காமெடி சமீபகால படங்களில் கேட்டு புளித்துப்போனதாகவே இருப்பதால் பெரிதாக எடுபடவில்லை. அர்ஜுனன், வேல ராமமூர்த்தி, ரம்யா சுப்ரமணியன், சாம் பால் உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு எற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து படமாக்கிவரும் விஜய், இந்த படத்திலும் வித்தியாசமான கதையை கையிலெடுத்திருக்கிறார். கஷ்டப்பட்டு உழைக்கக்கூடிய நடிகர்களை வைத்து வேலை வாங்கிவிட்டு திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார். இவர் காமெடியாக எடுத்த காட்சிகளில் எல்லாம் சுத்தமாக சிரிக்கவே தோன்றவில்லை.
காட்டில் வாழ்பவர்கள்தான் மனிதர்களாக வாழ்கிறார்கள். நகரத்தில் வாழும் சிலபேரால் நாம் காட்டுவாசியாகவே தெரிகிறோம் என்ற ஆழமான கருத்தையும் சமூகத்திற்கு சொல்ல வந்திருக்கிறார். காட்டுவாசிகளின் போர்க்குணம், அவர்களின் குணாதிசயங்களை ஜெயம் ரவி மூலமாக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லையென்றாலும், பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. திருவின் ஒளிப்பதிவு அந்தமான் காடுகளை வளைத்து வளைத்து படமாக்கியிருக்கிறது. காட்சிகளிலும் குளுமை இருக்கிறது.
மொத்தத்தில் ‘வனமகன்’ நம் வசமில்லை.

Post A Comment: