சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைபடத்தின் ஃபர்ஸ்ட்லுக் சூர்யாவின் பிறந்த நாளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தின் தனி பாடல் வெளியீடு திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் இயக்குநர் விக்னேஷ் சிவனே எழுதியுள்ளார்.
அவற்றில் ஒரு பாடலான 'நானா தானா வீணா போனா' என்று தொடங்கும் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாக விக்னேஷ் சிவனின் சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 'என்னுடைய கோட்டையில் இருந்து நேராக அனிருத்தின் இதயத்திற்கு சென்ற பாடல் இது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே 'நானும் ரௌடிதான்' படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த விக்னேஷ்-அனிருத் கூட்டணி இந்த படத்திலும் அதேபோல் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post A Comment: