இந்த வாரத்திற்கான பிக் பாஸ் லக்ஜுரி பட்ஜெட் டாஸ்கின் படி ஓவியா மற்றும் காயத்திரி ஆகியோரை பிக்பாஸ் அழைத்து மற்ற போட்டியாளர்களை அழைத்து அவர்கள் மனதில் உள்ள கருத்தை உண்மையை வெளிப்படுத்தும் விதமாக பேட்டியெடுக்கும் படி தெரிவித்தார்.
ஒவ்வொரு போட்டியாளர்களிடமும், ஓவியா தன் மீது ஏதேனும் பிரச்னை உள்ளதா? மனஸ்தாபம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக கேள்வியை கேட்டார்.
அதே போல காயத்ரி, ஓவியா, ஜூலி விவகாரத்தில் என் மீதான பார்வை எப்படி உள்ளது என்பதை தெரிந்துகொண்டார்.
இந்த பேட்டியின் முடிவில் காயத்ரி குறித்து ஓவியாவும், ஓவியா குறித்து காயத்ரியும் தாங்கள் நினைக்கும் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். இதையடுத்து இருவரும் இணைந்தனர்.
இவர்கள் ஒன்றாக இணைந்த நிலையில், ஜூலி டைனிங் டேபிலில் அமைதியாக யோசிப்பதை குறித்து சினேகன், ‘ வேற ஏதாச்சும் புதுசா திட்டம் தீட்டுறயா’ என நக்கலாக கேட்டார்.
முந்தைய பிக் பாஸ் எபிசோட்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள...
31வது நாள் இரவில் அனைவரும் உறங்கும் போது ஜூலி பேய் வேடமிட்டு பயமுறுத்த முயன்று, ஆண் போட்டியாளர்களிடம் போர்வையை மூடி அடிவாங்கினார்.
Post A Comment: