Propellerads
Navigation

பிக்பாஸ் தொடர்பில் வெளியில் வந்த நமீதா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து அண்மையில் வெளியேற்றப்பட்ட நமீதா தற்போதுதான் தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து அவர் ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதியுள்ளார்.

'பாதி உண்மை' என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்த கவிதையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். 

நீங்கள் ஒரு புன்னகையுடன் காலையில் விழித்துவிட்டு நல்லதை செய்ய விரும்புவீpர்கள். ஆனால் யாராவது உங்களை தூண்டிவிடுவதால், உங்கள் மன அமைதி குலைந்துவிடுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த வரிகள் நிச்சயம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவரை குறிப்பிடுவதாக உள்ளது. அவர் குறிப்பிட்டு ஒருவரது பெயரை இந்த வரிகளில் குறிப்பிடவில்லை என்றாலும் அது ஓவியாவை குறிப்பிடுவதாகவே தெரிகிறது.

நமீதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும்போது கமல்ஹாசனிடம் ஓவியா குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த நிகழ்ச்சி குறித்து அவர் குறிப்பிடும்போது ஒரு முழு நாளில் நடந்த நிகழ்ச்சிகளில் ஒருமணி நேரமாக சுருக்கும்போது பல உண்மைகள் மறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

நமீதாவின் இந்த 'பாதி உண்மை' கவிதையில் எந்த அளவுக்கு முழு உண்மை உள்ளது என்பது போக போகத்தெரியும்.
Share
Banner

Post A Comment: