பிக்பாஸ் வீட்டில் எப்போதுமே ஜாலியாக சிரித்த முகத்துடன் இருப்பது ஓவியா மட்டுமே. ஆனால் அவரை வெறுப்பேற்றி அழவைத்து பார்ப்பதே ஒருசிலருக்கு முழு நேர பணியாக உள்ளது. குறிப்பாக ஜூலியை கூறலாம்.
இந்த நிலையில் இன்று வெளியான ப்ரமோ வீடியோவில் ஓவியா விரக்தியின் எல்லைக்கே சென்று கதறி அழுவது போன்றும் அவரை ஆரவ்வும், சினேகனும் தேற்றுவது போன்றும் உள்ளது.
ஓவியாவை கூப்பிட்டு பேசி சமாதானப்படுத்தவில்லை என்றால் அவர் விபரீதமான முடிவுக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் சினேகன் கூறியதால் ஏதோ சீரியஸாக நடந்தது போல் தெரிகிறது.
ஓவியாவை அழவைத்ததால் அவரது புரட்சிப்படையினர் டுவிட்டரில் கொந்தளித்து வருகின்றனர்.
முன்னதாக யாரை ஓங்கி ஒரு அறை அறைய வேண்டும் என்று ஜூலி கேட்க அதற்கு ரைசா ஓவியா என்று கூறுகிறார்.
மேலும் ஜூலி நடந்து வரும்போது கார்ப்பேட்டை இழுத்து ஜூலியை விழவைக்கும் வகையில் ஓவியா முயற்சிக்கின்றார்.
இதுவும் ஒரு டாஸ்க்கா? அல்லது உண்மையான சண்டையா என்பது இன்றைய நிகழ்ச்சியில்தான் தெரியும்.
Post A Comment: