அழகுக்கலை நிலைய உரிமையாளரான இளம்பெண் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான தோட்ட நிர்வாகியொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த தோட்டர நிர்வாகி, லுணுகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
லுணுகலைப் பகுதி பெருந்தோட்டமொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த குறித்த பெருந்தோட்டநிர்வாகி, அழகுபடுத்தும் நிலைய உரிமையாளரான அழகிய இளம்பெண்ணை, மனப்பதாக வாக்குறுதியளித்து, அப்பெண்ணுடன் நெருங்கிய காதலில் ஈடுபட்டிருந்தார்.
இருவரும் உல்லாசமாக பல்வேறு இடங்களுக்கும் சென்று, வந்துள்ளனர்.
இந்நிலையில், அவ்இளம் பெண், தோட்ட நிர்வாகியிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் தோட்ட நிர்வாகியோ, அக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அவ் இளம் பெண் கோடரியொன்றுடன், தோட்ட நிருவாகியின் வாசஸ்தலத்திற்கு சென்று, வாசஸ்தலத்தின் கதவு, யன்னல்களை உடைத்து தேசதப்படுத்திய பின், தோட்ட நிர்வாகியையும் தாக்கியுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
#Lunugala #Arrest
Post A Comment: