போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரில், விசாரணைக்கு சென்ற போது ஒரு காவல்துறை உத்தியோகத்தர் என்னை தொட்டு தள்ளினார் என தெலுங்கு நடிகை சார்மி புகார் அளித்துள்ளார்.
போதைபொருள் கடத்தல் தொடர்பில் அண்மையில், நடிகை சார்மி காவல்நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் கொடுத்தார்.
அப்போது, ஸ்ரீனிவாஸ் என்கிற காவல்துறை உத்தியோகத்தர் என்னை தொட்டு தள்ளினார் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
'நான் விசாரணைக்கு வரும்போது அங்கு கும்பலாக இருந்தது. எனவே, அவர்களை கடந்து செல்வதில் எனக்கு சிரமம் ஏற்பட்டது.
அங்கு பல பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் நின்றிருந்தனர். ஆனால், எனக்கு பாதுகாப்பு தருகிறேன் எனக்கூறி, அவர் என்னை தொட்டு தள்ளினார்.
அவர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.
Post A Comment: