மலேஷியாவில் இருக்கும் தனுஷ், மச்சினிச்சியுடன் இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகிறார்.
வேலையில்லா பட்டதாரி2 இத்திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதில் தனுஷ் பிஸியாக இருக்கிறார்.
மலேசியா சென்றுள்ள தனுஷிற்கு, மலேசிய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இதனை தனுஷ், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
என்னவொரு பிரமாதமான ஈவ்னிங், ரசிகர்கள் ஹேப்பி ஃபர்த்டே பாடல் பாடும் போது மிகவும் மனதை தொடும் விதமாக இருந்தது என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள தனுஷிற்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் பிறந்தநாள் போஸ்டர்களும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
தனுஷின் மச்சினிச்சியான சௌந்தர்யா ரஜினிகாந்த், ஹேப்பி ஃபர்த்டே டி சார்! என்னுடைய வழிகாட்டி, என்னுடைய சிறந்த நண்பன்! என்று டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனுஷின் வில்லி கஜோல் (வசுந்தரா பரமேஸ்வரன்) கூறுகையில்,
ஹேப்பி ஃபர்த்டே தனுஷ்! இந்த பிறந்தநாள் உண்மையிலேயே விசேஷமானது என்று எனக்குத் தெரியும் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Post A Comment: