ஆரவின் பலவீனமே ஓவியாவுடன் நெருக்கமாக இருப்பதே என்று ஜூலி கூறியுள்ளார்.
பிக் பாஸ் குடும்பத்தில் உள்ள ஆரவ் மீது ஜூலியின் பொறாமைக் கருத்துக்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் பகல் நேரத்தில் ஓய்வான நிலையில் ஜூலி, ரைசா ஆகியோர் படுக்கையில் படுத்திருந்தனர்.
அப்போது தூங்குவது போன்ற நிலைக்கு ஜூலி சென்றதால், நாய் குரைக்கும் சத்தம் எழுப்பி அனைவரையும் எழ வைத்தனர். இதையடுத்து விழித்துக் கொண்டனர்.
அப்போது, ஆரவின் பலவீனமே ஓவியாவுடன் நெருக்கமாக இருப்பதே என்று தெரிவித்தார். ஆனால் அது பலம் தான் என்று ரைசா குறிப்பிட்டார்.
இதையடுத்து மற்றொரு சமயத்தில் ஓவியாவை வர்ணித்து கவிஞர் சிநேகம் கவிதை வடித்தார். அதில் எது சரி என்றும், சரியில்லை என்றும் ஓவியா தனது கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.
Post A Comment: