பாகிஸ்தானின் பஞ்சாயத்து தீப்பினை அடுத்து 16 வயது சிறுமி குடுமபத்தினர் முன்னிலையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் குஜாபராபாத் நகரில் உள்ள ராஜ்பூர் என்ற கிராமத்தில் வசிக்கும் உமர் என்பவர் கடந்த 16ஆம் திகதி அஷ்பக் என்பவரின் சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த வழக்கு கிராம பஞ்சாயத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து பஞ்சாயத்தில் உமரின் சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் இதுகுறித்து உமர் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதையடுத்து கிராம் பஞ்சாயத்து உறுப்பினர்கள் 30 பேர், அஷ்பக் மற்றும் உமர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வன்புணர்வு செய்யுமாறு உத்தரவு பிறப்பித்த கிராம பஞ்சாயத்து தலைவர் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Post A Comment: