தனுஷ், அமலாபால், நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.
முதல் பாகத்தில் நடித்த தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, ஆகியோர்களுடன் முக்கிய வேடத்தில் பிரபல நடிகை கஜோல் இணணந்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.
“ஒருத்தனுக்கு எதிரிங்க அதிகமா இருந்தாங்கன்னா, அவனைப்பார்த்து அவங்க எல்லாம் பயப்படுறாங்கன்னு அர்த்தம், அப்பத்தான் நீ உன்னோட துறையில உருப்படியா ஏதும் செஞ்சுகிட்ட இருக்கன்னு அர்த்தம், எதிரிங்க இல்லைன்னா வாழ்க்கையே போர், இந்த எதிரிங்க எல்லாம் அவங்களா வருவாங்க, அவங்களா போயிருவாங்க” என்ற வசனத்துடன் வெளிவந்துள்ளது.
இந்த திரைப்படத்தின் டீசர் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post A Comment: