பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகம் முழுவதும் ஒருசில நாட்களில் பிரபலம் ஆனவர் நடிகை ஓவியா. தமிழில் இவர் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் இன்று அனைவரின் விருப்பத்திற்குரிய நடிகையாக மாறியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த முதல் படமான 'மெரினா' படத்தின் நாயகி ஓவியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், 'இன்று இருப்பது போலவே மெரினா படத்தில் நடித்தபோதும் ஜாலியாகவும், கள்ளங்கபடம் இல்லாத அப்பாவியாகவும் இருந்ததாகவும், இத்தனை வருடத்தில் அவர் மாறாமல் இருப்பது ஆச்சரியம் என்றும் குறிப்பிட்டார்.
'மெரினா' படத்தில் செந்தில்நாதன் என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன், சொப்னசுந்தரி என்ற கேரக்டரில் ஓவியாவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment: