Propellerads
Navigation

5 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது இளைஞர்!

பாகிஸ்தானில் ஐந்து வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் டஹான் பகுதியில் ரமன் ஷர் என்ற கிராமத்தில் 5 வயது சிறுமி ஒருவருக்கும் 22 வயது இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணம் குறித்து காவல்துறைக்கு முன்னதாகவே தகவல் கிடைத்துள்ளது.

ஆனால், திருமணம் நடைபெற்ற இடத்துக்கு காவல்துறையினர் தாமதமாக சென்றதால் அந்த திருமணத்தை தடுக்க முடியவில்லை.

இருப்பினும் 5 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக 22 வயது மணமகன், அவரது தந்தை மற்றும் திருமணத்தை பதிவு செய்த பதிவாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதனை மீறி ஐந்து வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததால் அவர்களை கைது செய்துள்ளது அந்நாட்டு காவல்துறை.
Share
Banner

Post A Comment: