Propellerads
Navigation

உடலெங்கும் ஆயிரம் பெண்குறி கொண்ட இந்து கடவுள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்து மத புராண கதைகள் பலவன இருக்கின்றன என்பதை பலரும் அறிந்திருப்பர். அதில் பல கிளை கதைகளும் இருக்கின்றன என்பதை சிலர் தான் அறிந்திருப்பர்.

இந்திய புராணங்களில் யார், யாருக்கு என்னென்ன நடந்தது, அது எதற்காக நடந்தது என ஒருவரின் நிலை, சாபம் என அனைத்தையும் விளக்கும் பல கிளை கதைகள் இருக்கின்றன.

அவற்றுள் இன்று தான் இந்திரனும் ஆயிரம் கண்களும் எனும் கதை. இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் இருப்பது பலரும் அறிந்த கதை தான். ஆனால், அது கண்கள் அல்ல பெண்குறிகள் என இந்த கதை கூறுகிறது...

அகல்யா, படைக்கும் கடவுள் பிரம்மன் அழகின் மூலப் பொருட்கள் கொண்டு படைத்த பேரழகி. அகல்யா கௌதம் எனும் முனிவரை மணம்முடித்து கொண்டார். இங்கே தான் துவங்குகிறது இந்திரன் ஆயிரம் கண்கள் பெற்ற கதையின் கரு.

பிரம்மன் படைத்த பேரழகி மீது இந்திரனுக்கு ஆசை வந்தது. எனவே, அகல்யாவை பின்தொடர ஆரம்பித்தார் இந்திரன். ஒரு ஆசையின் எல்லை கடந்து அகல்யாவை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பூமிக்கு சென்றார்.

பேரழகி அகல்யாவை அடைய அவளது கணவனின் தோற்றத்தில் உருமாறி சென்றார். அவருடன் உறவும் கொண்டார். ஆனால், விதியின் காரணத்தால் அன்றே அகப்பட்டார் இந்திரன். இந்திரன் செய்த பாவ செயலுக்கு தண்டனையாக கௌதம முனிவர் இந்திரனை சபித்தார்.

அப்படி இந்திரனுக்கு முனிவர் கொடுத்த சாபம் தான் உடல் முழுதும் ஆயிரம் பெண்குறிகள் கொள்வதாகும். உடலெங்கும் ஆயிரம் பெண்குறிகள் கொண்டு வெளியே கூட செல்ல முடியாத வெட்கி கூனும் நிலைக்கு ஆளானார் இந்திரன்.

பிறகு பிரம்மன் உட்பட பிற கடவுள்களுக்கு இதுபற்றி அறிய, முனிவரை கண்டு பிரம்மன் இது மிகவும் கொடுமையானது என கூறினாராம்.

அதன்பின் சாந்தமான முனிவர், அந்த ஆயிரம் பெண்குறிகள் மற்றவர்களுக்கு கண்களாக தெரியும் என சாபத்தை மாற்றினாராம்.

இப்படி தான் இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் என்ற நிலை வந்தது என இந்த கிளை கதை கூறுகிறது.
Share
Banner

Post A Comment: