பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' மற்றும் 'பிகே' ஆகிய திரைப்படங்கள் உலக அளவில் மாபெரும் வசூலை குவித்த இந்திய திரைப்படங்கள் என்ற பெருமையை பெற்ற நிலையில் அவருடைய இன்னொரு படமான 'தங்கல்' திரைப்படம் உலக அளவில் ரூ.2000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையை தற்போது பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்த படம் ஏற்கனவே வசூலை குவித்த நிலையில், சமீபத்தில் சீனா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் வெளியாகி அந்நாட்டு ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றதால் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.2000 கோடியை தாண்டியுள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.70 கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அறிந்த சீன அரசு இந்த படத்திற்கு வரிவிலக்கு அளித்து பெருமைப்படுத்தியது. ஆங்கில படங்களை தவிர்த்து உலக அளவில் அதிக வசூல் பெற்ற படங்களில் ஐந்தாவது இடத்தை 'தங்கல்' பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏற்கனவே ரூ.1600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள 'பாகுபலி 2' திரைப்படம் விரைவில் சீனா, மற்றும் தைவான் நாடுகளில் வெளியாகவுள்ளது. எனவே 'தங்கல்' வசூல் சாதனையை முறியடித்து ரூ.2000 கோடி வசூல் செய்யும் இரண்டாவது படமாக 'பாகுபலி 2' அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Post A Comment: