Propellerads

About

Navigation
Recent News

சினிமாவை விட்டு விலக தயார்! சிம்பு சவால்

சிம்பு மீதான பொதுவான குற்றச்சாட்டு அவர் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவார் என்பது தான். இந்த குற்றச்சாட்டை அவரை வைத்து படமெடுத்த கிட்டத்தட்ட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து சிம்பு பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். 'என்னை நம்பி படமெடுக்கும் இயக்குனர்கள் என்னிடம் இருந்து எந்தவிதமான நடிப்பை எதிர்பார்க்கின்றார்களோ அந்த நடிப்பை வெளிப்படுத்தும் மனநிலைக்கு நான் வந்தபின்னர்தான் படப்பிடிப்புக்கு வருவேன். அதுவரை நான் வீட்டை விட்டு கிளம்ப மாட்டேன். அதற்காக என்னை யார் திட்டினாலும் நான் அதை கண்டுகொள்ள மாட்டேன்' என்று கூறினார்.

அதே நேரத்தில் சிம்பு நடிக்க வந்த பின்னர் ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு 20 டேக் எடுத்தார், 25 டேக் எடுத்தார், அதனால் தான் படப்பிடிப்பு தாமதமானது என்று எந்த இயக்குனராவது கூறினால் நான் சினிமாவை விட்டு விலகத்தயார்' என்று சவால் விடுத்துள்ளார்.

சிம்பு, படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தாலும் பெரும்பாலான காட்சிகளை ஒரே டேக்கில் முடித்துவிடுவார் என்று கவுதம் மேனன் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: