Propellerads
Navigation

சன்னிலியோன் உயிரை காப்பாற்றிய விமானி

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் தனியார் விமானம் ஒன்றில் வெளிநாட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது மோசமான வானிலை காரணமாக திடீரென விமானம் நிலை குலைந்தது. விமானம் விபத்தில் சிக்கிவிடுமோ என்று அனைவரும் அஞ்சிய நிலையில், அனுபவம் வாய்ந்த விமானி, தனது திறமையால் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார்.

சன்னிலியோன் உள்பட அனைவரையும் பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றிய விமானிக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர். 

இதுகுறித்து சன்னிலியோன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ' நாங்கள் பயணித்த தனியார் விமானம் ஒன்று மோசமான வானிலையில் சிக்கி, கிட்டத்தட்ட விபத்து ஏற்படும் நிலைக்கு சென்றுவிட்டது. விமானி ரொம்பவும் சிரமப்பட்டு எங்களுடைய விமானத்தை பத்திரமாக தரையிறக்கிவிட்டார். 

அந்த சமயத்தில் நாங்கள் அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம். ஆனால் அதே நேரத்தில் எங்களை போல விமானியும் கடவுளை வேண்டியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைக்கவே நடுங்குகிறது' என்று அவர் இந்த சோகத்திலும் நகைச்சுவையை இணைத்துள்ளார்.

மேலும், நாங்கள் இப்போது உயிருடன் இருக்கிறோம் என்றும் எங்களுடைய வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருக்கிறோம் என்றும் கூறிய சன்னிலியோன் தன்னை டுவிட்டரில் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
Share
Banner

Post A Comment: