Propellerads
Navigation

நடிகை இறந்த மறுநாளே அவரது தாயாரும் மரணம்

ஸ்டார் வார்ஸ் உள்பட பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை கேர்ரி ஃபிஷர் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவின் துயரத்தில் இருந்து இன்னும் அவருடைய குடும்பத்தினர்களும் ரசிகர்களும் மீண்டு வராத நிலையில் இன்று கேர்ரி ஃபிஷரின் தாயாரும் மரணம் அடைந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மகள் மறைந்த துயரம் தாங்காமல் அவரது தாயாரும் மரணம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

மகள் கேர்ரி ஃபிஷர் மறைந்த சோகம் காரணமாக அவருடைய தாயார் டெபி ரெனால்ட்ஸ் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், மகளின் ஈமச்சடங்கு குறித்த ஆலோசனையில் இருந்தபோது திடீரென உடல்நலம் குன்றியதாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போதிலும் சிகிச்சையின் பலனின்றி  டெபி ரெனால்ட்ஸ் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. நடிகை கேர்ரி ஃபிஷர் இறந்த மறுநாளே அவரது தாயாரும் மரணம் அடைந்தது ஹாலிவுட் படவுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Share
Banner

Post A Comment: