Fast and Furious படத்தின் ஏழு பாகங்களும் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் எட்டாவது பாகம் மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படம் வரும் 2017, ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என்று பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் பிரமாண்டமான விழாவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரைலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முந்தைய பாகங்களில் நடித்த வின் டீசல், ஜெசன் ஸ்டேதாம், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கேரிகேரி இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஏழாம் பாகத்தின் படப்பிடிப்பின்போது பிரபல நடிகர் பால்வாக்கர் ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment: