Propellerads

About

Navigation
Recent News

செல்பியால் சிக்கலில் மாட்​டிய ப்ரியங்கா சோப்ரா

பெர்லினில் உள்ள ஹோலோகாஸ்ட் நினைவகம் என்பது சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த ஒரு இடம். சுமார் 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் நாஜிக்களால் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தின் நினைவிடமாக இந்த இடம் உள்ளது. 
 
இந்த புனிதமான இடத்தில் ப்ரியங்கா சோப்ரா இரண்டு செல்பி புகைப்படங்களை எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதோடு, அதில் சர்ச்சைக்குரிய வாசகங்களையும் பதிவு செய்துள்ளார். ஒரு செல்பியில் அவர் தனியாகவும் இன்னொரு செல்பியில் அவரும் அவரது சகோதரரும் உள்ளார்கள்

ஜெர்மனியர்கள் புனிதமாக கருதும் இந்த இடத்தில் செல்பி எடுத்து சர்ச்சைக்குரிய கருத்தையும் தெரிவித்த ப்ரியங்கா சோப்ராவுக்கு சமூக வலைத்தளத்தில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் இரண்டு புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் இருந்து ப்ரியங்கா அகற்றிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: