சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் காலா திரைப்படம் தொடர்பில், பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி முக்கிய தகவல் ஒன்றை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதன்படி இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் பெயர் ஜரீனா என்றும், இந்த படத்தில் பீம்ஜி என்ற இன்னொரு முக்கிய கேரக்டரும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் ரஞ்சித், சட்டமேதை அம்பேத்கர் அவர்கலின் தீவிர ஆதரவாளர் என்பது தெரிந்ததே. அம்பேத்காரின் உண்மையான பெயரான பீமாராவ் ராம்ஜி என்ற பெயரை சுருக்கி பீம்ஜி என்றுதான் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இருக்கும்.
இந்த நிலையில் பீம்ஜி என்ற கேரக்டர் 'காலா' படத்திலும் உள்ளது என்பதை ஹூமா குரேஷ் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜரீனா கேரக்டரில் தான் நடிப்பதை ஹூமா குரேஷி உறுதி செய்திருந்தாலும் பீம்ஜி கேரக்டரில் நடிப்பது யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை. இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post A Comment: