விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த நடிகர் விஜய் அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.
திரைப்பட நடிகர் விஜய், அவரது கார் ஓட்டுநர் மற்றும் ஒருவருடன் திடீரென ஆண்டாள் கோயிலுக்கு வந்தார்.
அப்போது குல்லா, மாஸ்க் அணிந்திருந்தார்.
அங்கு அவர் நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தார். தனது பெயருக்கும், பெற்றோர் பெயருக்கும் அர்ச்சனை செய்தார்.
சுமார் 10 நிமிஷங்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், மீண்டும் காரில் ஏறி சென்று விட்டார்.
Post A Comment: