கமல்ஹாசனின் அடுத்தத் திரைப்படமான 'தலைவன் இருக்கின்றான்' அரசியல் கதையம்சம் கொண்ட திரைப்படமாக தயாராகயிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கமல் பிஸியாக இருக்கிறார்.
இதன் காரணமாக சபாஷ்நாயுடு திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்படிப்பு தொடங்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விஸ்வரூபம்-2 திரைப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
இன்னும் ஒரு வாரம் நடிக்க வேண்டியிருக்கும் நிலையில், இந்த 2 திரைப்படங்களையும் விரைவில் முடித்துவிட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் திரையிட திட்டமிட்டிருக்கிறார்.
இந்நிலையில், தனது அடுத்த திரைப்படத்துக்கான அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இந்தத் திரைப்படத்துக்கு தலைவன் இருக்கின்றான் என்று பெயரிடப்பட்டுள்ளார்.
தற்போது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் கமல், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் தலைப்பையும் வித்தியாசமாக வைத்து அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டார்.
'தலைவன் இருக்கின்றான்' திரைப்படம் அரசியல் பின்னணிப் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
படத்திற்கு ஏற்றவாறு கதை உருவாகி வருவதாகவும், இத்திரைப்படத்தில் தாதாக்களின் அதிரடி மோதலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் தலைவன் இருக்கின்றான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
Post A Comment: