மலையாள நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.
மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு கடந்தாண்டு காவ்யா மாதவனை திலீப் திருமணம் செய்து கொண்டார்.
திலீப்புக்கு மஞ்சு வாரியர் மூலமாக மீனாட்சி என்ற மகள் இருக்கும் நிலையில், காவ்யா மாதவன் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அப்படியிருப்பதால் தான், மலையாள நடிகை கடத்தல் வழக்கில் அவர் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரின் வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
தற்போது பிரபல மலையாள நடிகை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்ட திலீப் ஆலுவா சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment: