கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகையாக விளங்கி வரும் சமந்தா இன்று தனது பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
சினிமாவில் சம்பாதித்த பணத்தை பலரும் வேறு தொழில்களில் முதலீடு செய்து வரும் நிலையில் சமந்தா, தனது சொந்த பணத்தில் பிரதியுஷா என்ற சமூக அமைப்பை தொடங்கி ஏழைகளுக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகிறார்.
சமூக சேவையில் தான் தனக்கு சந்தோஷம் கிடைப்பதாகவும், சிறுவயதில் இருந்தே சமூக சேவைகளில் தனக்கு ஈடுபாடு அதிகம் என்றும் சினிமாவில் கிடைக்கும் பணம், புகழை விட
சமூக சேவை மட்டுமே தனக்கு வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தை கொடுக்கும் என்றும் சமீபத்தில் சமந்தா அளித்த பேட்டியின் மூலம் அவரது உதவி செய்யும் உள்ளத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
கவுதம்மேனன் படத்தில் அறிமுகமானவர்கள் யாரும் சோடை போனதில்லை என்பதற்கேற்ப 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா, முதல் படத்திலேயே குறைந்த காட்சிகளில் நடித்திருந்தாலும் மனதை கவரும்படியான நடிப்பாக இருந்தது.
சமந்தாவை தென்னிந்தியா முழுவதும் பிரபலப்படுத்திய பெருமை எஸ்.எஸ்.ராஜமெளலிக்குத்தான் உண்டு. அவர் இயக்கிய நான் ஈ' படம் மூலம் சமந்தா அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார். அதன் பின்னர் 'நீதானே என் பொன்வசந்தம், 'கத்தி', '10 எண்றதுக்குள்ள, 'தங்கமகன்', '24' ஆகிய படங்களில் சமந்தாவின் முதிர்ச்சியான நடிப்பை பார்க்க முடிந்தது.
தற்போது சமந்தா 'இரும்புத்திரை', 'தளபதி 61', சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம், உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் அனைத்து படங்களும் வெற்றி பெற்று, விரைவில் நாக சைதன்யாவை திருமணம் செய்து திரையுலகிலும், குடும்ப வாழ்க்கையிலும் வெற்றி பெற இந்த இனிய பிறந்த நாளில் வாழ்த்துகிறோம்.
Post A Comment: