பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் ரூ.1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து இன்னும் நான்காவது வாரமாக வசூலை குவித்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் 100 ஆண்டுகால சினிமா வரலாற்றில் அதிகபட்ச தொகை வசூல் செய்தது இந்த படம் தான்.
கடந்த வாரம் சென்னையில் 19 திரையரங்குகளில் 318 காட்சிகள் திரையிடப்பட்ட 'பாகுபலி 2' திரைப்படம் ரூ.1,03,66,760 வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி நான்காவது வாரத்திலும் திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.13,75,96,050 என்பதும் மூன்று மொழிகளில் சேர்த்து இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.15,68,34,340 என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை பாக்ஸ் ஆபீஸில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள இந்த படத்தின் வசூலை முறியடிக்க எந்த படம் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Post A Comment: