Propellerads

About

Navigation
Recent News

வெங்கட் பிரபுவின் பார்ட்டியில் 3 ஹீரோயின்கள்

சென்னை 28 இரண்டாம் பாகத்திற்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படம் பார்ட்டி.

அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். வழக்கமாக வெங்கட்பிரபுவின் படங்களுக்கு யுவன்தான் இசை அமைப்பார்.

இந்தப் படத்திற்கு வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார்.

சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஜெய், சிவா, சம்பத், கயல் சந்திரன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

இவர்கள் தவிர ரெஜினா கசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முழுவதும் பிஜி தீவில் நடக்கிறது.

படக்குழுவினர் அடுத்த மாதம் பிஜி தீவு புறப்பட்டுச் செல்கிறார்கள். ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து திரும்புகிறார்கள்.
Share
Banner

Post A Comment: