எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படத்தின் தமிழ் பதிப்பு சென்னையில் கடந்த வாரம் ரூ.3 கோடி வசூலை நெருங்கியது என்பதை பார்த்தோம். தமிழ் பதிப்பு போலவே இந்த படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளின் வசூலும் சக்கைபோடு போட்டுள்ளது.
சென்னையில் இந்த படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகள் 11 திரையரங்குகளில் 173 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.51,96,020 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் இந்த படத்திற்கு 100% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டப்பிங் படம், ஒரிஜினல் படம் என்ற வேறுபாடு இல்லாமல் மூன்று மொழிகளிலும் மிகப்பெரிய வசூலை குவித்துள்ள இந்த படத்தின் வெற்றிக்கு ஒரே முக்கிய காரணம் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டம் தான் என்று கூறினால் அது சற்றும் மிகை இல்லாதது ஆகும்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: