பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் சமூகவலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடியபோது பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவற்றில் ஒன்று அவர் நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்தின் இசை வெளியீடு குறித்த தகவல் ஆகும்.
வேலைக்காரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளதாகவும், அதனையடுத்து ஒருசில நாட்களில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
'வேலைக்காரன்' படத்திற்கு சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும், இளம் இசைப்புயலுமான அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment: