அரியலூர் மாவட்டம் செந்துறையைச் சேர்ந்தவர் சர்மிளா. இவரும் அதே பகுதியை சேர்ந்த கலைராஜ் என்பவரும் காதலித்து வந்தனர்.
இதனையடுத்து பெற்றோர்கள் சர்மிளவை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். சர்மிளா கணவருடன் 3 வருடம் குடும்பம் நடத்தினார்.
இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
கணவரை பிரிந்து சர்மிளா மீண்டும் தனது காதலன் கலைராஜ் என்பவருடன் வாழ்ந்து வருகிறார்.
இதன் மூலம் சர்மிளா தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் தனது பெற்றோரிடம் வசித்து வரும் முதல் குழந்தையை அழைத்து செல்வதற்காக செந்துறை வந்தார்.
குழந்தையை அழைத்து செல்லக் கூடது என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து சர்மிளா பொன்பரப்பியில் உள்ள தனது உறவினர் வீட்டில் கொலை செய்யப்பட்டு உடலமாக மீட்கப்பட்டார்.
தனது காதலனை சர்மிளா திருமணம் செய்ததால் பெற்றோரே கௌரவக்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இது குறித்து செந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post A Comment: