“ஆடுகளம்” திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான டாப்ஸி, தமிழ், தெலுங்கிலும் வாய்ப்புகள் குறைந்ததால் ஹிந்திப் பக்கம் போனார்.
அங்கு அமிதாப்பச்சனுடன் நடித்த “பின்க்” திரைப்படம், டாப்ஸிக்கு ஹிந்தித் திரையுலகத்தின் கதவைத் தாராளமாகத் திறந்துவிட்டது. அதன் பின் ஹிந்தித் திரைப்படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார் .
ஹிந்தித் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான சாஜித் நடியத்வாலா தயாரிப்பில் “ஜூட்வா 2” திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் டாப்ஸி.
படப்பிடிப்பு சமயத்தில் டாப்ஸியும், சாஜித்தும் நெருங்கிப் பழகுவதாக பொலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது. ஆனால், இது திரைப்படம் சம்பந்தப்பட்ட பழக்கம்தானே தவிர வேறு எந்தப் பழக்கமும் இல்லை என டாப்ஸி மறுத்துள்ளார்.
இதனிடையே, திரைப்படத்தின் முதல் கதாநாயகியான ஜெக்குலின் பெர்ணான்டஸ், டாப்ஸி மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம்.
திரைப்படத்தின் இரண்டாவது நாயகியான டாப்ஸிக்கே அதிக முக்கியத்துவம் வரும் விதத்தில் திரைப்படத்தின் காட்சிகளை மாற்றிவிட்டார் என ஜெக்குலின் குற்றம் சாட்டுகிறாராம். பொலிவுட்டில் தற்போதைக்கு பரபரப்பான சண்டை இதுதான் என்கிறார்கள்.
Post A Comment: