Propellerads
Navigation

கார் ஓட்ட பயிற்சி எடுக்கும் நடிகைகள்

மூன்றெழுத்து நடிகை சமீபத்தில் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது சில சமூக விரோதிகளால் மானபங்கபடுத்தப்பட்ட செய்தி சினிமா உலகில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளது எனலாம். மூன்றெழுத்து நடிகை வெளியிட்ட இந்த அதிர்ச்சி தகவலையடுத்து, தொடர்ந்து பல நடிகைகளும் தங்களுக்கு அதுபோல் நடந்துள்ளதாக வெளியிட்டு வரும் செய்தி, மேலும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதனால், நடிகைகள் பலரும் படப்பிடிப்பு தளத்திலிருந்து அனுப்பப்படும் கார்களில் பயணிக்க ரொம்பவுமே தயக்கம் காட்டுகிறார்களாம். மேலும், தாங்களே கார்களை இயக்குவது என்று சில நடிகைகள் முடிவு செய்துள்ளார்களாம். நடிகைகள் அனைவரும் யாரை நம்புவது என்று முழி பிதுங்கி நிற்கிறார்களாம்.

கார் ஓட்டத்தெரியாத நடிகைகள் தற்போது கார் ஓட்டுவதற்கு பயிற்சி எடுக்கவும் முடிவு செய்திருக்கிறார்களாம். ஆனால், அங்கேயும் ஏதாவது நடந்துவிடுமா? என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறதாம். இதனால், ஒருசில நடிகைகள் தனக்கு நெருக்கமானவர்களை கார் ஓட்டுநர்களாக நியமித்துக் கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார்களாம்.
Share
Banner

Post A Comment: