உலகின் முதல் திருநங்கை பொம்மை வெளியாகி சமூக ஊடகங்களில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பொம்மை, டோன்னர் பொம்மை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் அது முதன்முறையாக நியூயார்க் பொம்மை கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது என்பது அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆயிரக்கணக்கான டிவீட்டுகள் இது குறித்து பதிவிடப்பட்டுள்ளன.
இந்த பொம்மை, ஆணாக பிறந்து பெண்ணாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜாஸ் ஜென்னிங்ஸ் என்னும் பதின்ம வயது ஆர்வலர் ஒருவரை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அவர் தனது ஆறுவயதில், பாலின அடையாள கோளாறு குறித்து யுஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட கருத்துகள் எழுந்துள்ளன.
Post A Comment: