Propellerads

About

Navigation
Recent News

“அதை“ தளர்த்திய நடிகை!

ஆரம்பத்தில் சேலைக்கடை விளம்பரத்தில் நடித்துவந்த நடிகைக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவே படங்களில்
நடிக்கத்தொடங்கி பிசியான நடிகையானார். 
தமிழின் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகை பட்டியலிலும் இடம்பிடித்தார். சமீபத்தில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில், நடிகை இனிமேல் நடிக்கும் படங்களுக்கு புதிதாக நிபந்தனைகள் எல்லாம் விதிக்கத் தொடங்கினார்.

முன்னணி நடிகைகளாக வலம்வந்த நடிகைகள் சிலர், தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் மட்டுமே தேர்வு செய்து என்ற நிபந்தனையுன் சில படங்களில் நடித்து வருகின்றனர். அந்த படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 
தனக்கும் அதுபோல் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று நினைத்த இந்த நடிகையும், தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் இருந்தால் கூறுங்கள் என்று நிபந்தனை விதிக்கிறாராம்.

அப்படி இவரை தேடிவந்த பல இயக்குனர்களும் தங்களிடம் அப்படியொரு கதையொன்றும் இல்லை என்று திரும்பி சென்றுவிட்டார்களாம். இதனால், தொடர்ந்து கதை கேட்டு வந்தவருக்கு எந்த கதையும் பிடிக்காததால் வாய்ப்புகள் இல்லாமலேயே போய்விட்டதாம். 
இப்படியே தொடர்ந்தால் நாம் ஓரக்கட்டப்படுவோம் என்று நினைத்தாரோ என்னவோ! திடீரென்று தன்னுடைய நிபந்தனையை தளர்த்திக் கொண்டுள்ளாராம்.

முன்னணி நடிகைகள் எல்லோரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கச் சென்றுவிட்டதால் இளம் ஹீரோக்கள் அதற்கடுத்தபடியாக இருக்கும் இந்த நடிகையுடன் டூயட் பாடவேண்டும் என்று ஆசைப்படுகிறார்களாம். 
ஆகையால், வாய்ப்பு இருக்கும்போதே எட்டி பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதுபோல் நடிகையும் முன்புமாதிரி எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்ற லெவலுக்கு இறங்கி வந்துவிட்டாராம்.
Share
Banner

Post A Comment: