நடிகர் விஜய் மற்றும் நடிகைகளான நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர், திடீர் சோதனை மேற்கொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னையில் மட்டும் 25 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதுடன் மதுரை, கொச்சி, ஹைதராபாத்தில் உள்ள வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இயக்குநர் சிம்புதேவன் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, மதுரை அன்பு, செல்வகுமார் ஆகியோரின் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக வருமான வரி கட்டாததன் காரணமாகவும், அதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதன் காரணமாகவே வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பல்வேறு இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீரென சினிமா பிரபலங்களின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் இருப்பது பல்வேறு விதமான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.
முக்கியமாக, தமன்னா வசிக்கும் ஹைதராபாத், பண்ணை வீடுகள் போன்ற பல்வேறு இடங்களிலும், நயன்தாரா வசிக்கும் திருவனந்தபுரம் வீடுகளிலும், விஜயின் ஹைதராபாத் மற்றும் சென்னையில் உள்ள அலுவலகம் மற்றும் அவருடைய வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டிருப்பதாக அந்த செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: