Propellerads
Navigation

பாலிவுட் ஹீரோக்களை பதறவைக்கும் பாகுபலி வசூல்

இந்தியத் திரையுலகில் முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறிடியத்து மாபெரும் புதிய சாதனையை 'பாகுபலி 2' படம் ஒரே வாரத்தில் படைத்திருக்கிறது. இதற்கு முன் இந்திய அளவில் ஆமீர்கான் நடித்த 'தங்கல்' படம்தான் 700 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் இருந்தது. 

அதுவும் அந்தப் படம் ஓடிய மொத்த நாட்களின் வசூல். ஆனால், 'பாகுபலி 2' படம் ஒரே வாரத்தில் அந்த சாதனையை முறியடித்து 800 கோடி பிளஸ் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை தினம் என்பதால் மேலும் 200 கோடியை வசூலித்து பத்து நாட்களுக்குள் 1000 கோடி ரூபாய் வசூலை இப்படம் புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நேரடி ஹிந்திப் படங்களின் வசூலை ஒரு தெலுங்கு டப்பிங் படம் முறியடித்துள்ளது என்பதை பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை பொறாமைப்பட வைத்திருக்கிறது. அதனால்தான், ஒரு வாரமாகியும் இன்னும் 'பாகுபலி 2' பற்றி பாராட்டி ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருக்கிறார்கள்.

இந்தியாவில் மட்டும் 'பாகுபலி 2' படத்தின் ஹிந்தி டப்பிங் படத்தின் வசூலை 250 கோடியைத் தொட்டிருக்கிறது. இது அடுத்த நாட்களில் அதிகமாகி இந்திய வசூலில் 300 கோடியைக் கடந்துள்ள 'தங்கல், பஜ்ரங்கி பைஜான், சுல்தான், பிகே' ஆகிய படங்களுடன் 300 கோடி கிளப்பில் இணைந்துவிடும்.

ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 170 கோடி ரூபாயும், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் தலா 62 கோடி ரூபாயும், கேரளாவில் 33 கோடி ரூபாயும், அமெரிக்காவில் 85 கோடி ரூபாயும், மற்ற நாடுகளில் சுமார் 75 கோடி ரூபாயும், மற்ற உலக நாடுகளில் சுமார் 100 கோடி வரையிலும் வசூலித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

செலவினம் போக நிகர வசூல் 500 கோடியைத் தாண்டியிருக்கிறதாம். இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் இந்தியப் படங்களின் அதிக வசூலில் முதலிடத்தையும், முதல் முறையாக 800 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளது 'பாகுபலி 2'.

எப்படியும் இந்த மாதம் முழுவதும் 'பாகுபலி 2' வசூல் நிறைவாகவே இருக்கும் என்பதால் படத்தின் வசூல் 1500 கோடி ரூபாயைத் தாண்ட வாய்ப்புகள் அதிகம்.
Share
Banner

Post A Comment: