ரஜினியின் 161வது படத்தை இயக்கும் பா.ரஞ்சித், அந்த படத்திற்கும் சந்தோஷ் நாராயணனையே இசையமைப்பாளராக்கியிருக்கிறார்.
கபாலி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் அந்த படத்தில் நெருப்புடா என்ற சூப்பர் ஹிட் பாடலையும் கொடுத்தார். அது இப்போதுவரை ரசிகர்களின் விருப்ப பாடலாக இருந்து வருகிறது.
இம்மாதம் இறுதியில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே பாடல்களுக்கு டியூன் அமைக்கும் வேலைகளை தொடங்கி விட்டார் சந்தோஷ்நாராயணன்.
அதன்காரணமாக சில பாடல்களின் கம்போஸிங் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதனால் சூட்டிங் செல்லும்போது, சில பாடல்களையும் கையோடு கொண்டு செல்கிறாராம் பா.ரஞ்சித்.
Post A Comment: