கமல், சிவாஜியை அடுத்து தற்போது விஜய்சேதுபதி 8 வித்தியாசமான கேரக்டர்களில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கி வரும் ;ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்ற படத்தில் விஜய்சேதுபதி பழங்குடி இனத்தவர் உள்பட எட்டு வித்தியாசமான தோற்றங்களில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
விஜய்சேதுபதியின் வித்தியாசமான தோற்றங்களுக்காக அவருக்கு மூன்று ஹேர்ஸ்டைல் கலைஞர்களும், மேக்கப் கலைஞர்களும் நியமனம் செய்யப்பட்டிருபதாக இயக்குனர் ஆறுமுககுமார் கூறியுள்ளார்.
விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக், நிஹாரிகா கொனிடெலா, ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார்.
கோலிவுட் திரையுலகில் 'தசாவதாரம்' என்ற படத்தின் மூலம் 10 கேரக்டர்களில் நடித்த ஒரே நடிகர் என்ற புகழ் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இன்னும் உள்ளது.
அதேபோல் 'நவராத்திரி' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 9 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருந்தார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: